Thursday, April 17, 2014

நடு ரோட்டில் பெண்ணின் ஆடையை கிழித்த அவலம்: குடிகாரர்களின் வெறிச்செயல்

ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக விரோதிகள் 3 பேர் நடுரோட்டில் வைத்து பெண்ணின் ஆடையை கிழித்த அவல சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள நயாகோன் பகுதியை சேர்ந்த முட்டை வியாபாரியின் மனைவியின் ஆடையை 3 நபர்கள் சேர்ந்து கிழித்து அட்டகாசம் செய்துள்ளனர்.



இந்த சம்பவம் அப்பெண்ணின் கணவர் முன்னால் அரங்கேறியதால் கோபம் கொண்ட அவர் அவர்களுடன் போராடியுள்ளார். ஆனால் அந்த 3 நபர்களும் அவரை தாக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து தன்னைகாப்பாற்ற போராடி அப்பெண், ரோட்டில் அரை குறை ஆடையுடன் ஓடி உள்ளார்.

பின்னர் அந்த கும்பல் கடையில் இருந்த ரூ 5 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து கொண்டு, கடைக்கும் தீவைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதில் ஒருவனது பெயர் ஜதீந்தர் பண்டிட் அவன் தனது நண்பர் 2 பேருடன் வந்து இந்த செயலில் ஈடுபட்டு உள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment